Wednesday, July 16, 2008

போகாதே

``வணக்கம் சார்!''

நடைப்பயிற்சிக்காக சாலை ஓரமாகச் சென்று கொண்டிருந்த செல்லப்பா நின்றார் ``வணக்கம்! நீ யாரென்றே தெரியவில்லையே தம்பி'' என்றார். எதிரே நின்றவனுக்கு 30 வயது இருக்கலாம்.

செல்லப்பா சென்ற வருடம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்.

எதிரே இருப்பவன் நமது பழைய மாணவனாக இருக்கலாம் என நினைத்தார்.

அவர் நினைத்தது சரி.

``சார்! நான் உங்கள் மாணவன். இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன்''

என்றான் நன்றிப் பெருக்குடன்.

``நீ உழைத்துப் படித்ததனால் முன்னேறி இருக்கிறாய். இதில் என்ன ஆச்சரியம்'' என்றார்.

ஆசிரியருக்கு பெருமைபிடிபடவில்லை. நம்மிடம் படித்தவன் நல்ல நிலைக்கு வந்து நன்றி கூறுகிறானே என்று.

``என்ன வேலையில் இருக்கிறாய்'' என்றார்.

``உங்களிடம் படிக்கும்போது மக்கு, மண்டு, நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்வீர்களே அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்''

என்றார்.

``800 மாடுகள் வைத்து பால்பண்ணை நடத்தி நன்றாக இருக்கிறேன். ஒருநாள் என் பண்ணைப் பக்கம் வாருங்கள் சார்'' என விசிட்டிங் கார்டை தந்து விட்டு டூவீலரில் ஏறி பறந்து விட்டான்.

அவனைத் திட்டியதற்கு வருந்துவதா? அல்லது நல்ல நிலைமைக்கு வந்துவிட்டதை

எண்ணி மகிழ்வதா? என திகைத்து நின்றார் செல்லப்பா ஆசிரியர்..

0 comments: