மாப்ளே... ஒரு பார்ட்டி கழுத்துல நாலஞ்சு பவுன் செயினு, கையில பிரேஸ்லெட், மோதிரம்னு வெயிட்டா மாட்டிருக்கான். ஒரு டிராவலிங் பேக் வேற வெச்சிருக்கான்... எக்கச்சக்க பணமிருக்கும் போல தெரியுது! தர்மபுரிக்குப் போகணும்னு கார்ல உட்கார்ந்திருக்கான்... இப்போ புறப்பட்டுடுவேன்..
நீ என்ன பண்ற, உடனே வண்டி எடுத்துட்டுப் போய் டேம் ரோடு தாண்டி நம்ம ஆட்களோட நில்லு! காரை நிறுத்து கையைக் காட்டி... நிறுத்தறேன்... சும்மா பேருக்கு எனக்கொரு `பஞ்ச்' விடு! அப்புறம் கைவரிசையை காட்டிடு''
என முணுமுணுப்பாகப் பேசிவிட்டு காரின் அருகில் வந்தான் டிரைவர் ராமு.
காரிலிருந்த ஆசாமியிடம்
``புறப்படலாமா சார்?'' என்று கேட்டான்.
``ஓ... தாராளமா!'' என்றான் அந்த ஆசாமி.
கார் கிளம்பியது. பல கனவுகளுடன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் ராமு.
பைபாஸ் மேம்பாலம் அருகில் கார் வந்ததும் ராமுவின் கழுத்தில் ஒரு பெரிய கத்தியை வைத்தான் காரிலிருந்த ஆசாமி. அதிர்ச்சியில் காரை நிறுத்தினான் ராமு.
``மரியாதையா கீழே இறங்கு இல்லைன்னா தலை துண்டாயிடும்'' என்று மிரட்டினான்.
ராமு நடுங்கியபடி இறங்கினான். காரை எடுத்துக்கொண்டு பெங்களூருவை நோக்கிப் பறந்தான் சவாரிக்கு ஏறிய ஆசாமி!..
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment