Wednesday, July 16, 2008

ரவை உப்புமா

தேவையானப் பொருட்கள்
ரவை -- 1 1/2 கப்
பெரிய வெங்காயம் -- 3 என்னம் (நீளமாக மெல்லியதாக அரிந்தது)
பச்சை மிளகாய் -- 4 என்னம் (நீளமாக அரிந்தது)
கடலை பருப்பு -- 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
எண்ணைய் -- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
உப்பு -- ருசிக்கேற்ப

செய்முறை

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
பின் வெங்காயம், பச்சைமிளகாய் , உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் விடவும்.
ஒரு கொதி கொதித்தவுடன் ரவையை கொஞ்ச கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும்
சுவையான ரவை உப்புமா ரெடி.

0 comments: