Wednesday, July 16, 2008

சிக்கன் பூரி

கொஞ்சம் வேலை போல தோன்றினாலும், ருசிக்காக செய்து பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ,
மைதா - 1/2 கிலோ,
முட்டை - 2,
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
கறி மசால் தூள் - 1 தேக்கரண்டி,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் -4,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - 1துண்டு,
எலுமிச்சம் பழம் - 1/4 மூடி,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரி மசால் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.( மீதி தண்ணீர் இருக்கக் கூடாது).
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
முட்டையை உடைத்து நன்கு அடித்து, மைதாவுடன் கலக்கவும்.
உப்பு, தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும்.
வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த கறியை கொட்டி வதக்கவும்.
நன்கு வதக்கியபின், எலுமிச்சம் பழ சாறு பிழிந்து கலக்கவும்.
எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து, பூரி போல் தேய்த்து, சிக்கன் மசாலாவை உள்ளே வைத்து மூடி, மசாலா வெளியே வராமல் பூரியாக தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் தேய்த்து வைத்த பூரியை போட்டு பொரித்து எடுக்கவும்.


குறிப்பு:சிக்கன் குருமாவுடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

0 comments: