Wednesday, July 2, 2008

பிளாக் டீ குடித்தால் புற்றுநோயை தடுக்கலாம்: ஆய்வு

வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 9 ஜூன் 2008 ( 15:35 IST )
புகைப்பிடிப்பவர்கள் உடனடியாக பிளாக் டீ குடித்தால் புற்றுநோயை தடுக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


புகைப்பிடிப்பவர்களை பல்வேறு நோய்கள் தேடிவரும் என்பதும் தெரிந்த விஷயம். குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்நிலையில், புகைப்பழக்கம் உள்ளவர் புகைப் பிடித்ததும் ஒரு தம்ளர் பால் கலக்காத தேனீர் (பிளாக் டீ) அருந்தினால் புற்றுநோய் அபாயம் குறையும் என கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதவிர, கேரட், பீன்ஸ், வெங்காயம் போன்ற காய்கறிகளையும், ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி போன்ற பழங்களையும் அதிகம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியுமாம்.

மேற்கூறிய பிளாக் டீ, காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் பிளேவனாய்ட் என்ற ரசாயனப் பொருள் புற்றுநோயை தடுக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் முதல்கட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அடுத்தக் கட்டமாக பிளேவனாய்ட் ரசாயனத்தை பயன்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

புகைப் பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டால், இதுபோன்ற விஷப் பரீட்சைகளே தேவை இல்லை என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

0 comments: