புகைப் பிடிக்கும் பழக்கத்தால் நடுத்தர வயதில் ஞாபக சக்தி குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, இங்குள்ள பிரான்ஸ் இன்ஸ்டிடியூட் தேசிய ஆய்வு மையத்தின் ஆராச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
35லிருந்து 55 வயதுக்குட்பட்ட 10,308 நபர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் அனைவருமே புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.
இவர்களிடம் நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நடுத்தர வயதில் இலேசான ஞாபக மறதிகள் ஏற்படும்.
இரண்டாம் கட்டமாக, அதிகளவிலான ஞாபக மறதி ஏற்பட்டு வார்த்தை உச்சரிப்புகளில் தடுமாற்றம் ஏற்படும்.
3வது கட்டமாக உடலின் இதர பகுதிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும். இறுதியாக, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Wednesday, July 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment