தேவையான பொருட்கள்:
காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும், எல்லாம் சேர்த்து ஒரு கப்)
வெங்காயம் - பொடியாக நறுக்கியது,
கசகசா, சோம்பு - தலா ஒரு ஸ்பூன்,
தேங்காய் விழுது - அரை மூடி,
ஏலக்காய், பட்டை, கிராம்பு, முந்திரி - வறுப்பதற்கு,
பால் - அரை கப்.
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, முந்திரி போட்டு வறுத்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் விழுதில் பாதியைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி வேக வைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். பிறகு அதில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அத்துடன் மீதி தேங்காய் விழுதைச் சேர்த்து, பாலும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். சாதம், சப்பாத்தி, பிரட் என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான சைட் டிஷ் இது!.
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment