தேவையான பொருட்கள்:
சிக்கன் (போன்லெஸ்) - 4 மெல்லிய துண்டுகள்
பூண்டு பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்,
சோயா சாஸ்- சில்லி சாஸ் - தலா 2 ஸ்பூன்,
மிளகுத் தூள், எண்ணெய், உப்பு, வினிகர் - தேவையான அளவு,
சர்க்கரை ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்).
செய்முறை:
சிக்கன் துண்டுகளை, சோயா, சில்லி சாஸ், மிளகுத் தூள், வினிகர் ஆகியவைகளில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லில் (கனமானது) எண்ணெய் காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டுகிரில்டு சில்லி சிக்கன் இரண்டு பக்கமும் மிதமான தீயில் வேக விட வேண்டும். வேகும்போது சிக்கன் துண்டுகளின் அடியில் தங்கியிருக்கும் சாஸை சிறிது சிறிதாக ஊற்றி வறுக்க. சுவையான சில்லி சிக்கன் ரெடி.
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment