``என்னங்க இன்னிக்குப் பேப்பரைப் பார்த்தீங்களா'' பரபரப்பாக வந்தாள் அனிதா.
`என்ன லாட்டரியில் உனக்குப் பரிசா விழுந்திருக்கு. என்றான் பிரகாஷ் கிண்டலாக.
``அதில்லைங்க... தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைஞ்சிருக்காம். கிராமுக்கு நாற்பது ரூபாய் தள்ளுபடின்னு சரிமாரியாக விளம்பரம் ரொம்ப சந்தோஷமாக இருக்கு'' என்று பூரிப்போடு சொன்னாள் அனிதா.
``அடிப்போடி... உனக்கு எப்பப் பார்த்தாலும் தங்கம், வெள்ளினு இதே நினைப்புத்தான்'' என்று அலுத்துக் கொண்டான் பிரகாஷ்.
அனிதாவுக்கு நீண்ட நாளாக வெள்ளித் தட்டு வாங்க வேண்டும் என்று ஆசை. தன் நாத்தனார் வீட்டுக்கு எப்போது சென்றாலும் வெள்ளித்தட்டில் விருந்து படைத்து அலட்டிக் கொள்கிறாள் என்று அனிதாவின் ஆதங்கம்.
அனிதா, தினமும் தன் கணவன் பால் வாங்கக் கொடுக்கும் ரூபாய் இருபதில் மிச்சம் பிடித்து சேமித்துக் கொண்டே வந்ததில் இப்போது அவளிடம் ரூபாய் ஐயாயிரத்து எண்ணூறுக்கு மேல் இருந்தது. தன் கனவு நினைவாகப் போகிறது என்கிற சந்தோஷத்தில் அதை வங்கிக் கணக்கில் சேர்த்தாள் அனிதா.
மறுநாள் செய்திதாளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள் அனிதா. ``பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி இலங்கை, இந்தோனேசியா உள்பட பல நாடுகளில் 3 லட்சம் பேர் உயிர் பலி'' என்று போட்டிருந்தது.
அனிதாவின் கண்களில் கண்ணீர் அருவியாய் ஓடியது. இழந்த உயிர்களுக்கு இது ஈடாகுமா? என்று மனதில் நினைத்துக்கொண்டு தன்னுடைய காசோலையில் ``பூகம்ப நிவாரண நிதி'' என்று எழுதினாள் அனிதா.
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment