Sunday, July 6, 2008

ராஜ்மா மசாலா



தேவையானப் பொருட்கள்

ராஜ்மா -- ஒரு கப்
பட்டை -- ஒரு அங்குலம் அளவு
கிராம்பு -- 2 என்னம்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
உப்பு -- ருசிக்கேற்ப
சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
தேங்காய் -- 1/2 மூடி (திக்கான பால் எடுக்கவும்)
எண்ணைய் -- தாளிக்க

செய்முறை

முதலில் ராஜ்மாவை இரவே ஊறவைக்கவேண்டும்.
பின் குக்கரில் 10 நிமிடம் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு வேகவைத்த ராஜ்மாவை போட்டு சிவப்புமிளகாய், சீரகத்தூள்,மிளகாய் தூள் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கி 1/2 கப் தண்ணீர் விட்டு கிளறி 5 நிமிடம் வேகவைக்கவும்.


பின் திக்கான தேங்காய் பாலை விட்டு மசாலா கலவை எல்லாம் ராஜ்மாவில் ஒட்டி வரும் வரை சமைத்து இறக்கவும்.
சுவையான ராஜ்மா மசாலா ரெடி.

0 comments: