Monday, July 7, 2008

பயற்றங்கஞ்சி

தேவையானவை :

பயற்றம் பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
பால் - 1/2 கப்
நறுக்கிய தேங்காய் - 2 தேக்கரண்டி
முந்திரி - கொஞ்சம்
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி


செய்முறை :


பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து நன்கு குழைய வேக வைக்கவும். வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, வந்த பருப்பில் கொட்டிக் கலந்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கவும். நெய்யில் வறுத்த தேங்காய், முந்திரி, காய்ச்சிய பால், ஏலப்பொடி சேர்க்கவும்.
சுவையான சத்தான பயற்றங்கஞ்சி தயார். வயிற்றுக்கு நிறைவு தரும். விரதம் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல இரவு பானம்.

0 comments: