Monday, July 7, 2008

பாசி பயறு லட்டு


தேவையானவை :

வறுத்த பயறு மாவு - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை,

பேரீச்சம்பழம் - கொஞ்சம்.

செய்முறை :

முழுப் பயறை வெறும் வாணலியில் நல்ல வாசனை வரும் வரை காந்தாமல் மிதமான சூட்டில் வறுக்கவும். ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும். நாட்டுச் சர்க்கரையை நன்கு பொடித்து இதனுடன் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, பேரீச்சம்பழம் சேர்த்து நன்கு சூடாக்கிய நெய் ஊற்றி உருண்டைகள் பிடித்து ஆறியபின் டப்பாவில் வைக்கவும். சத்தான, ருசியான பயற்றம் உருண்டை தயார்.

0 comments: