Monday, July 7, 2008

ராகி புட்டு

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 100 கிராம்,

உப்பு 1/4 டீஸ்பூன்,

தண்ணீர் -50 மில்லி,

தேங்காய்த் துருவல் - 1/4 கப்,

சர்க்கரை - தேவைக்கேற்ப.

செய்முறை

ராகி மாவை நன்றாக சலித்துவிட்டு உப்பையும், தண்ணீரையும் சலித்த மாவில் தெளிக்க வேண்டும்.


சொத சொத வென்று இல்லாமல் உதிரியாகும்படி தெளித்துவிட்டு அரைமணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.


பிறகு இட்லி குக்கரில் உள்ள துணியை தண்ணீர் விட்டு அலசிப் பிழிந்து உதறிய பிறகு உதிரியாக இருக்கும் புட்டை கொட்டி தேங்காயைத் தூவி ஆவிகட்டவும்.


மேக்ஸிமம் இரண்டு முறையாவது ஆவி கட்டினால்தான் நன்றாக வெந்திருக்கும். (சரியாக வேகவில்லை என்றால் பாத்ரூமில் குடியிருக்க வேண்டியிருக்கும்!) சுவையான ராகிபுட்டு ரெடி. அதுவே குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வேண்டுமெனில் வெங்காயம், பச்சைமிளகாயைத் தவிர்த்துவிட்டு நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து கொடுத்தால் ம்... ராகி புட்டு டேஸ்ட்டி...

0 comments: