Wednesday, July 16, 2008

அடை

தேவையானப் பொருட்கள்
பச்சரிசி -- 1கப்
புழுங்கல் அரிசி -- 1கப்
உளுத்தம் பருப்பு -- ஒரு கைப்பிடி
கடலை பருப்பு -- 1/2 கப்
துவரம்பருப்பு -- 1/2 கப்
பாசி பருப்பு -- ஒரு கைப்பிடி
வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் -- 4 ஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 7 என்னம்

செய்முறை

அரிசி,பருப்புகளை 45 நிமிடம் ஊறவைத்து அரைக்கவும்.
சீரகம்,சோம்பு, மிளகாய் வத்தல் இவற்றை அரைத்து மாவுடன் சேர்க்கவும்.
வெங்காயம், தேங்காய் துருவல், உப்பு, கறிவேப்பிலை இவற்றை எல்லாம் மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி தோசையை விட கொஞ்சம் திக்காக அடையாக வார்க்கவும்.
எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு சிவப்பாக மொரு மொருவென வார்த்து எடுக்கவும்.
அடை ரெடி.

0 comments: