Saturday, July 5, 2008

மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்)

அரேபியர்கள் பொதுவாக காரம் அதிகம் சாப்பிட மாட்டார்கள், அதனால் அவர்களுடைய சாப்பாடு காரத்தன்மை குறைவாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

மீன் - 5 பெரிய துண்டுகள் (அவர்கள் முழு மீனில் செய்த ரெசிப்பியை நான் துண்டுகாளாக செய்துப்பார்த்தேன்)
மஞ்சள் தூள் - 1 டீஸ் ஸ்பூன்
கோதுமைமாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் கழுவினமீனை போட்டு அதில் உப்பு, மஞ்சள்த்தூள் தூவி நன்றாக பிரட்டி வைக்கவும்,

பின்னர் மீனின் மீது கோதுமைமாவைத்தூவவும். இப்படி ஒவ்வொரு மீனாக தூவி, அதை ஒரு தட்டில் வைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் மீனை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்

எளிமையகாக செய்யக்கூடிய அரேபியன் மீன் வறுவல் தயார்.

0 comments: