ராமசாமி தனது மகள் திருமணம் முடிந்த கையோடு மொய் பணத்தைச் சரிபார்க்க ஆரம்பித்தான்.
சுப்பையா இருநூறு ரூபாய், மணி நூறு ரூபாய், தவசி முந்நூறு ரூபாய்... இப்படிப் படித்துக் கொண்டே வந்தவன், சங்கர் பண்ணையார் அம்பதுரூபாய் என்றிருந்ததும் சற்றே பொறுமினான்.
ஊரில் பெரும் பணக்காரர் அம்பது ரூபாய் மொய் செய்திருக்கிறாரே?
மறுநாள் ராமசாமி கடைத்தெருவில் நடந்துபோய்க் கொண்டிருக்கையில் சங்கர் பண்ணையார் அவனை அழைத்தார். ``ராமசாமி உன் மகள் திருமணத்திற்கு ஆயிரம் ரூபாய் மொய் செய்திருக்கலாம். ஆனால் என் வீட்ல வர்ற விசேஷத்திற்கு நீ அதே மாதிரி பதிலுக்கு மொய் செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நீ கஷ்டப்படக்கூடாதேன்னுதான் நான் அம்பது ரூபாய் மொய் செய்தேன். மத்தபடி உன் மகள் திருமணம் நல்லபடியா நடந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றார்.
ராமசாமிக்கு அவர் சொல்வதில் நியாயம் இருப்பதுபோல் தெரிந்தது.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment