ஊருக்கு உபகாரம் பண்ணியதெல்லாம் போதும். வீட்டுக்கு வருமானம் வேண்டாமா? பெத்த பிள்ளைக்கு வேலை கிடைக்கிற வழியைப் பாருங்க.''
மனைவி சரோஜா கத்தினாள்.
``என் நேர்மை பத்தித் தெரியும்ல. யார்கிட்டயும், `ரெக்கமண்ட்' கேட்க மாட்டேன்னு தெரிஞ்சுமா, கேட்கச் சொல்ற..''
``உங்க ஃப்ரெண்டோட அந்தக் கார் கம்பெனில வேலை கிடைச்சா, எங்கயோ போயிடலாம்ப்பா..'' மகனும் கெஞ்சினான்.
மறுநாள், சீக்கிரமே அக் கம்பெனிக்குப் போனார். மாலையானதும், மகிழ்ச்சியுடன் வந்து சொன்னார்.
``சரோ....! வேலை கிடைச்சிருச்சு. கேட்கவே, கூச்சமா இருந்துச்சுடி. ஆனாலும், தைரியமா கேட்டுட்டேன். அவரும் தயங்கினாலும், சரின்னு சொல்லிட்டார்டி....''
``அப்பாடா. உருப்படியா, ஒரு வேலை பண்ணியிருக்கீங்க. ரொம்ப சந்தோஷங்க.''
``தாங்க்ஸ்பா. என்னிக்குப்பா, நான் வேலைல ஜாயின் பண்ணணும்...'' பிள்ளை கேட்டான்.
``நீயில்லடா... நான்தான், நாளைக்கே சேரணும்...''
``என்ன சொல்றீங்க...?''
``ஆமாம்டா. உனக்குக் கேட்டா, அது ரெக்கமண்டேஷனாயிடும், அதான். `வீட்ல ரிட்டையர்டாகி இருக்கிற எனக்கேத்த வேலையா, ஏதாவது கொடுங்களேன்'னு கேட்டேன். தயக்கப்பட்டாலும் சரின்னுட்டார்.''.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment