பர்னிச்சர் கடையில் கட்டில் வாங்கப் போயிருந்தேன் கணவருடன் புதிதாய் திருமணம் ஆன என் மகளுக்குக் கொடுக்க.
பெரிய கட்டிலைக் காட்டினார் கடைக்காரர்.
அதை வாங்கலாம் என்று எனக்கு ஆசை. ஆனால் விலை அதிகம். என் கணவர் அதை ஒதுக்கிவிட்டு, சிறியதாய் இருவர் கட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.
எனக்கு கோபம் வந்துவிட்டது.
``என்னங்க விலை கொறச்சலா இருக்கேன்னு இந்த சின்ன கட்டிலை வாங்குறீங்களா? அந்த பெரிய கட்டிலை வாங்கினா, பிற்பாடு குழந்தை குட்டிகளுடன் கூட படுத்துக்கொள்ளலாம் சவுகரியமான்னு கடைக்காரர் சொன்னாரே! ஒரு தடவைதான் கட்டில் வாங்கப் போறோம். கஞ்சத்தனம் பண்ணாம பெரிசா பார்த்து வாங்குங்க!'' என்றேன் கடுகடுப்பாய்.
``அடி அசடு! ரொம்ப பெரிய கட்டில்னா அந்த மூலையில ஒருத்தரும், இந்த மூலையில ஒருத்தரும் படுத்துப்பாங்க! தம்பதிகளிடம் அன்னியோன்யம் இருக்காது. சின்ன கட்டில்னா ஒருத்தர் மேல ஒருத்தர் உரசி, இடித்துக்கொண்டு படுத்துக்கொள்வதால், அன்பு பெருக்கெடுக்கும்! வம்சமும் தழைக்கும்!'' என்றார் சிரிப்புடன்.
``அனுபவம் பேசுதோ?'' என்றேன் ஆமோதித்தவாறு..
Saturday, August 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment