Thursday, August 14, 2008

சனிக்கிழமை

என் பொண்ணு, எம்.எஸ்.சி. உன் புள்ளை, வெறும் பிளஸ்டூ. மளிகைக் கடையில கணக்கெழுதறான். எப்படி நீ பொண்ணு கொடுன்னு கேப்ப...'' ராஜன், அக்காவிடம் எகிறினார்.

உடனே, பாங்க் மாப்பிள்ளையைப் பார்த்து விட்டார்.

மாப்பிள்ளையின் அம்மா பேசினார்.

``அப்போ, ஒரு வைரத்தோடும், 40 சவரன் நகையும் போட்டுடுங்க. கைல, இரண்டு லட்சம் ரூபா தந்திடுங்க. என்ன சரியா...?''

``என்ன சொல்லப் போறப்பா...'' லலிதா கேட்டாள்.

``வேறென்ன...? கடன்தான் வாங் கணும்.''

லலிதா சொன்னாள்.

``மானேஜரா யிருந்தும், ரெண்டு லட்சம் ரொக்கம் வேணும்; நகையும் வேணும்ங்கறார். சரிங்கறீங்க...?

அத்தை பையன் ரவி, அஞ்சு பைசா கூட கேட்கலை.

ஒரே ஒரு லட்சத்தை, ரவிக்கு கொடுங்கப்பா. என்னை கல்யாணமும் பண்ணிப்பார்; மளிகைக் கடை ஓனராவும் ஆகிடுவார். யோசிப்பா...''

ராஜன், பதிலேதும் பேசாமல், சனிக்கிழமை ரவிக்கு போன் செய்தார்..

0 comments: