ஹலோ, ராகவா... என்ன; அப்படியா! பேசி முடி, வாங்கிப் போட்டுடலாம். என்ன? என் பெரியப்பா பிள்ளை... சதுர அடி... மூவாயிரம் வரை கேட்டானா? பாருடா அவனை. சரி சரி நான் நாலாயிரம் வரை கொடுத்து வாங்கத் தயார். `ஹ, ஹ, ஹா,' நான் வாங்கும் நிலத்திற்கு இப்பவே,
நானே மவுசு கூட்டிட்டேன். யாருக்கும் சொல்லாதே, இதையும் நானே வாங்கிக்கிறேன், சரியா ஓ.கே.'' கை பேசியை மடக்கினேன்.
``என்ன, போன் பேசவிடாம ஒரே அழுகை. இவன் ஸ்கூலுக்கு கிளம்பலையா?'' மனைவியை முறைத்தேன்.
``பாருங்க இவனை, நிறைய பேனா வெச்சுண்டிருக்கான். திரும்பவும் புதுசு வேணுமாம். சரி, வாங்கித்தரேன். உன்னிடம் இருப்பதை உன் தம்பிக்கு கொடு என்றால் மாட்டானாம். எல்லாம் இவனுக்குதான் வேண்டுமாம். ஒரே அடம், அழுகை.... இப்பவே இப்படி இருக்கானே,
பெரியவனானதும் எப்படியோ!'' மனைவி பேசப் பேச, `சுருக்'கென்றது எனக்கு... காலச்சக்கரம் உருண்டு `என்னைப் போல் என் பிள்ளையும் எல்லாம் தனதாக்கிக் கொண்டு, பெற்றோர்களையும், தம்பி, தங்கைகளையும் கவனிக்காமல்...' நினைக்கவே பயமாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை போன் போட்டேன். ``ராகவா, உன்னிடம் கேட்ட அந்த பார்ட்டிக்கே நிலத்தைக் கொடுத்து விடு, எனக்கு வேண்டாம். எனக்கு இருப்பதே போதும்.''
மனைவியின் புன்னகையில் திருப்தி தெரிந்தது. என் மனதும் உடனே அமைதியானது..
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment