கம்பெனியில் நிதி நிலைமை சரியில்லாததால் மூடிவிட வேண்டியதுதான் என்று ஃபாக்டரியில் வசந்தி பேசிக்கொள்ளவே அனைவரும் கவலைப்பட ஆரம்பித்தனர்.
குரு தன் கம்பெனி டைரக்டர்களை அழைத்து திங்கட்கிழமை மீட்டிங் போட்டான். எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு செலவைக் குறைக்க யோசனைகளை அள்ளி விட்டார்கள்.
மீட்டிங்கிற்கு காபி கொண்டு வந்து வைத்த கேட்டரிங் மாணிக்கம் மெல்ல தயங்கியவாறு நின்றான்.
``நான் ஒண்ணு சொல்லலாமா சார்'' என்றான். கேலிப்பார்வைகள் அவன் மீது படிந்தன.
``செலவை அதிகப்படுத்தலாம் சார்'' என்றான் சிரிப்புடன்.
குரு திகைத்தான். கிண்டல் செய்கிறானோ?
``செலவை தாராளமா செய்தா பாக்டரியில வேலை செய்யறவங்க மட்டுமில்லாம கம்பெனியை விலைக்கு கேட்கறவங்களும் தயங்குவாங்க.
புரொடக்ஷனை அதிகப்படுத்தினா தயாரிச்சதை எப்படியும் வித்தே ஆகணும்னு மார்க்கெட்டிங் ஆளுங்க துடிப்பா இயங்குவாங்க'' என்றான்.
குரு சிரித்தவாறு அவனை அழைத்து
``நீ என்ன படிச்சிருக்கே'' என்றான்,
``நல்ல புத்தி சொல்ல படிச்சிருக்க வேண்டியதில்லை. யோசிச்சா?போதும்`' என்றதும் கட்டிக் கொண்டான்
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment