Thursday, August 14, 2008

செவ்வாய்க்கிழமை

தேவகி டீச்சர் அதிர்ந்தாள். செவ்வாய்க்கிழமை உமா, ரவி இரு பிள்ளைகளும் புது அம்மாவுடன் வந்து நின்றனர். புது அம்மா... வேறு யாருமில்லை. காவேரி... அவள் வீட்டில் வேலை பார்ப்பவள்!

அவளது அக்கா பவானி உள்ளூரில் வாழ்க்கைப்பட்டு... உமா, ரவி இருவரையும் பெற்றுப் போட்டாள். பசி, பட்டினி யோடு வதைபட்டாள்.
அவள் கணவன் சித்தன் குடிகாரன்.

மூன்றாவது பிரசவத்தின்போது பவானி இறந்துவிட்டாள். அழுது நிற்கும் குழந்தைகளை காவேரி தான் அரவணைத்தாள்.

ஒருவாரமாகியிருக் கும். கரிபெருமாள் கோயி லுக்கு காவேரியை அழைத்துப் போய் தாலி கட்டி அழைத்து வந்தான்.

``உன் வயது என்ன, அவன் வயது என்ன! திடீர்னு இப்படிப் பண்ணிட்டியே... ஏன் காவேரி?'' என்றாள் தேவகி டீச்சர்.

``நானும் இல்லைன்னா... பிள்ளைங்க ரெண்டும் தெருவுல நிக்கும். புதுசா பெத்து... அதை வளர்க்குறதைவிட... இருக்கறதை நல்ல முறைல ஆளாக்குறது மேலில்லையா?" என்றாள் காவேரி.

தேவகி டீச்சர் அசந்து போனாள்..

0 comments: