Thursday, August 14, 2008

புதன்கிழமை

பொண்ணுக்கும்... பையனுக்கும் பிடிச்சாச்சு...

பையனை... அதான் உங்க மகனை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொல்றேன்.. இதுல என்ன யோசிக்க இருக்கு... புதன்கிழமை முடிவைச் சொல்லுங்க. நாங்க வர்றோம்...''

அவர்கள் புறப்பட்டனர்.

``ஏங்க நான்தான்.. சரின்னு சொல்லுங்கன்னு சைகை காட்டிட்டுதானே இருந்தேன்... அப்புறமும் என்ன யோசனை?''

மனைவி கமலா வேதநாயகத்தைச் சாடினாள்.

``அது கமலா... உன் சைகை எனக்கு சரியா புரியலை. அதான்...''

பொய் சொன்னார் வேதநாயகம்...

தன் தந்தை அன்று யோசிக்காமல் செய்த தவறை இன்று தான் அனுபவிப்பதும்... தன் மகனுக்கும் அதே தவறு நேர்ந்து விடாமல் அவனைக் காப்பாற்ற வேதநாயகத்திற்கு வேறு வழி தெரியவில்லை

0 comments: