வாசல் தெளிப்பதற்காக வெளியே வந்த வள்ளி பக்கத்து வீட்டு மீனாட்சியைப் பார்த்ததும் கேட்டாள்.
``என்னக்கா...! மாமனார் வந்திருக்கிறார் போல...''
``என்ன மாமனாரோ... போ...! பெரிய ஆபீசரா இருந்தவருன்னுதான் பேரு... வியாழக்கிழமை பள்ளிக்கூடம் தொடங்கப் போகிறதே... பையனுக்கு உதவுவோம்... பேரக் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித் தருவோம்னு தோணுதா...? இங்க வந்தும், பெரிய ஆபீசருன்னுதான் நினைப்பு'' என்று அங்கலாய்த்தபடி உள்ளே சென்றாள்.
வாசல் தெளித்துவிட்டு, உள்ளே வந்த வள்ளி, குழந்தைகளின் நோட்டுப்புத்தகங்களுக்கு அட்டை போட்டுக்கொண்டிருந்த தனது மாமனாரைப் பார்த்து,
``ஏன் மாமா..! உங்களுக்குதான் உடம்பு முடியலையே... ஏன் இந்த வேலையெல்லாம்?'' என்றாள்.
``பரவாயில்லையம்மா...! உழுத நிலமெல்லாம் வித்து உன் புருசன படிக்கவைச்சேன். இப்ப பேரக்குழந்தைகளுக்கென்று கொடுக்க ஒன்றுமில்லை. நாலு எழுத்து படிச்சிருந்தா... சொல்லியாவது கொடுக்கலாம். அதுக்கும்.. வழியில்ல! என்னால முடிந்தது... இது தானம்மா...'' என்று சொன்னவரை... கண்களில் நீர் பனிக்க, நெகிழ்வோடு பார்த்தாள்..
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment