Saturday, August 16, 2008

ரொம்ப தேங்க்ஸ்டா!

நண்பன் வாசுவிற்கு டயல் செய்தான் சுதாகர்.

``என்னடா விஷயம்?''

``உனக்கு தேங்க்ஸ் பண்ணத்தான்..''

``எதுக்கு?''

``என் மனசை சந்தோஷப்படுத்திய உனக்கு தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்..''

``புரியும்படியா சொல்லுடா...''

``நேத்து உன் வீட்டுக்கு வந்திருந்தேன்..''

``என் வீட்டுக்கா.. நான் பார்க்கலையே..''

``வாசல் வரை வந்துட்டுத் திரும்பிட்டேன்..''

``ஏன்?''

``வாசல்லயே என் மனசு சந்தோஷமாயிடுச்சு.. இதுவரைக்கும் என் மனைவிதான் என்னைக் கேவலமா திட்டுவா... அடிப்பானு நினைச்சேன்.. ஆனா நேத்து உன் நிலையைப் பார்த்துட்டு என் மனைவி எவ்வளவோ பரவால்லைனு சந்தோஷமா இருந்தது.. அதான் திரும்பி வந்துட்டேன்..''.

0 comments: