சிவா.. தன் டூ வீலரை ஓரங்கட்டிவிட்டு.. செல்...லில் தன் ஆபீஸ் மேனேஜருடன் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்த அடுத்த நொடி...
`எக்ஸ்க்யூஸ்.. மி... சார்' தேன் குரல் கேட்டுத் திரும்பினான். இருபது வயது யுவதி! ஆரஞ்சு கலர் காட்டன் சுடிதாரில் கொழு.. கொழு... உடம்புடன் புன்னகைத்தாள்.
``ப்ளீஸ்... இந்த மெயின் ரோட்ட கிராஸ் பண்ண முடியல. ரொம்ப அர்ஜென்ட்.. இந்த மருந்த அந்த எதிர்க்கடையில வாங்கணும்.. கேன் யூ... ஹெல்ப்...?''
`ஓ. ஷ்யூர்' என்றவன், அவள் கொடுத்த பணம் மற்றும் பிரிஸ்கிரிப்ஷனுடன் மின்னலாய் சாலையை ஸ்டைலாகக் கடக்க ஆரம்பித்தான். இடையில் அவளைப் பார்க்கத் திரும்பியபோது... அவள் நன்றி கலந்த புன்னகையுடன் தேவதையாய் மின்னிக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களில் மருந்துகளை வாங்கி விட்டு... அதே வேகத்தில் சாலையைத் திரும்பிக் கடந்து தன் இடத்திற்கு வந்தவன் கண்களில்...
அவள் காணப்படவில்லை.
கூடவே அவனது வண்டியும்!.
Saturday, August 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment