Saturday, August 16, 2008

சரியான முடிவு!

``எங்கள் மாவட்டத்தில் தீண்டாமை இல்லை...'' மாவட்ட ஆட்சியர் தகவல்...

நாளிதழைப் படித்த மகாலிங்கம் அதிர்ந்தார்.

அடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுவோடு மகாலிங்கம்... எதிரே மாவட்ட ஆட்சித்தலைவர்.

``நீங்க நல்ல பெயர் வாங்கிக்கிறதுக்காக பேப்பரில் அறிக்கை விட்டால் போதுமா சார்... எங்க ஊரிலே இன்னும் ரெட்டைக் குவளை முறை இருக்கு சார்...''

``உங்க ஊரு பேரென்ன?''

``மஞ்சினிப்பட்டி''

``சரி... நீங்க போங்க... நான் பார்த்துக்கிறேன்...''

ஒரு வாரம் கடந்தது. பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

``ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால், அதில் தேடிப்பிடித்து ஒரு குறையைச் சொல்வது நம் மக்களிடத்தில் ஊறிப் போன விஷயம்... நீங்க `தீண்டாமை இல்லை'ன்னு செய்தி வெளியிட்டதாலேதான் மஞ்சினிப்பட்டி கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. சரிசெய்து விட்டேன். உங்களுக்கு நன்றி!''.

0 comments: