Saturday, August 16, 2008

ரொம்ப ஸாரி

எருமை மாடு... ரசத்தில் உப்பே சரியா போடலை...'' -மணவாளன்.

``கொஞ்சம் தலைவலி...'' - திலகம்.

ஆபீஸ் விட்டு வந்ததும் ... காபி கொடுத்தாள்.

``சே! சர்க்கரையே போடலை... எருமை மாடு... கவனம் இருந்தால்தானே...''

இரவு நண்பன் பராங்குசம் வந்தான்.

``எருமை முகத்தில் முழிச்சா ராசியே இல்லை...'' தன் மனைவியைப் பற்றி பராங்குசம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். திலகம் சமையலறையிலிருந்தவாறே இதைக்கேட்டுக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலை மணவாளனின் ஆறு வயது மகன் காபி எடுத்து வந்து அப்பாவை எழுப்பினான்.

``அந்த மகாராணியாலே முடியலையோ...'' கோபமாக சமையலறைக்கு வந்தான்.

``உனக்கு அறிவிருக்கா? குழந்தையை வேலை வாங்கறியே...''

``எருமை முகத்தில் விழிச்சா ராசி இல்லேன்னு சொன்னீங்களே... அதான், நான் வந்து உங்களை எழுப்பலை...''

``என்ன சொல்றே?''

``ஆமாங்க... நீங்க என்னைக்கு என்னை மனுஷியா நினைச்சு இருக்கீங்க... உங்களுக்கு நான் எருமை மாடுதானே...'' திலகத்தின் கண்கள் கலங்கின.

``ரொம்ப ஸாரி... என்னை மன்னிச்சுருடா...''

0 comments: