ஊரெங்கும் கலவர பூமியாக காட்சியளிக்க... டி.எஸ்.பி.சந்தானம் உதட்டைச் சுழித்தபடி அந்த ஜாதித்தலைவரின் உடைந்த சிலையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
``இந்த சிலை உடைஞ்சி கிடக்கிறதைப் பார்த்த முதல் ஆள் யாருயா?'' டி.எஸ்.பி. கேட்க... முறுக்கு மீசை ஆசாமி முன்னே வந்தான்.
``அடுத்தவாரம் தலைவரோட பிறந்தநாள் வருது. எந்த வருஷமும் இல்லாத அளவிற்கு பிரமாண்டமான முறையில் கொண்டாடணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம். அதுக்குள்ளே எந்தப் படுபாவியோ இப்படி பண்ணிட்டான் சார்''.
``எல்லாம் அந்த ஜாதிக்காரன்களோட வேலைதான். நீங்க அவங்களைப் பிடிச்சி உள்ளே தள்ளுங்க.'' கூட்டத்தில் குரல் வலுக்க... `ஆதாரமில்லாமல் யாரைப் பிடிப்பது?' யோசனையோடு டி.எஸ்.பி. அவர்களை சமாதானப்படுத்தினார். உடைந்த சிலை முன்பு துப்பாக்கி தாங்கிய போலீஸ் நிற்க, நடந்த சம்பவத்திற்குக் காரணமான அந்த ஜாதித் தலைவரின் சிலை இருக்கும் பார்க்கில் தினமும் புல் மேயும் மாடு, தான் முட்டியதால்தான் சிலை உடைந்தது என்பதை உணராமல்... ஜனங்களின் கூச்சலில் மிரண்டுபோய் ஓடிக்கொண்டிருந்தது..
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment