Sunday, August 3, 2008

லக்கி பிரைஸ்

எங்கள் கடையில் துணி வாங்கியதற்கு நன்றி. உங்கள் பில் நம்பருக்கு பரிசாக டி.வி. கிடைத்துள்ளது. வந்து பெற்றுக்கொள்ளவும்.''

எஸ்.எம்.எஸ்.ஐ பார்த்த ஸ்ரீதர் துள்ளிக் குதித்தான்.

``இன்று யார் முகத்தில் முழித்தேனோ! தெரியவில்லை. காலையிலிருந்தே... அதிர்ஷ்ட மழைதான்'' என்றபடி ஜாலியாக அந்தக் கடைக்குச் சென்றான்.

``சார்! என்னிடம் பில் இல்லை. மிஸ்ஸாயிடுச்சு!'' என்றான்.

``பரவாயில்லை! நாங்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ். உங்களுக்குத்தானே வந்தது? அப்போ பரிசு உங்களுக்குத்தான், அப்படி உட்காருங்க!'' என்றார் கடைக்காரர்.

மகிழ்ச்சியோடு அமர்ந்தான். சற்று நேரத்தில், இரண்டு கரடுமுரடான ஆசாமிகள் அவனை நோக்கி வந்தனர்.

சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எழுந்து ஓட நினைத்தவனை அப்படியே அமுக்கிப் பிடித்தனர்.

``ஏன்டா! அதுதான் 20 ஆயிரம் ரூபாய் செல்போனை கண்டெடுத்தியே... அப்படியே, போய்விடவேண்டியதுதானே! பத்தாயிரம் ரூபாய் டி.வி.க்கு ஆசைப்பட்டு... மாட்டிக்கிட்டியே'' என்றபடி செல்போனை பிடுங்கினர்..

0 comments: