வெடித்துவிட்டாள் யமுனா.
தினம் ராத்திரியில் சுரேஷ் அடிக்கிற கூத்து சுகமாக இருந்தாலும் வீட்டில் வயசுக்கு வந்த இரண்டு தங்கைகளை வைத்துக்கொண்டு என்னதான் புதுசாக கல்யாணமாகியிருந்தாலும் இப்படியா செய்வது? சே, காலையில் படுக்கையறையிலிருந்து எழுந்து வெளியே செல்லும்போதே கூசுகிறது.
``என்ன பண்ணச் சொல்றே? விவஸ்தையில்லாதவன் நான் இல்லை. எங்கம்மாதான்.''
``என்ன சொல்றீங்க?''
``என் தங்கை ரெண்டு பேரும் வேலை பார்க்கறாங்க. அதனால வீட்டுல வேலை பார்க்க ஆள் வேணும்னு எனக்கு உன்னை கட்டி வச்சாங்க.
பெரியவ ஆபீஸ்ல ஒரு பையனை லவ் பண்றா. ஆனா இவ வீட்டுக்கு பயப்படறா. சின்னவள் மேல அத்தை பையனுக்கு ஒரு கண். ஆனா அவனும் பயப்படறான். எங்கப்பா அம்மாவுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்க முடியாது. இது பாக்யராஜ் டெக்னிக். விரசமா இருந்தாலும் விவகாரத்தை கச்சினு முடிச்சிடும். வா இன்னொரு ஆட்டம் போடுவம்'' என்றதும் `ச்சீய்' என்று முகத்தை மூடிக்கொண்டாள் யமுனா..
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment