Sunday, August 3, 2008

மெடிக்கல் செக்கப் !

மகன் அலுவலகம் கிளம்பியதும்,மருமகள் சங்கரியை ஒரு ஆட்டோவில் திணித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தாள் பங்கஜம்.

"கல்யாணமாகி ஒரு வருஷமாச்சி. உன் வயித்தில புழு பூச்சி கூட உண்டாக மாட்டேங்குது... அதான் செக்கப் பண்ண கூட்டி வந்தேன்.''

அதிர்ந்து போன சங்கரியைப் பேச விடாமல் உள்ளே இழுத்துப் போனாள்.

சங்கரியைப் பரிசோதித்த டாக்டரம்மாள் பங்கஜத்தைத் தனியாக அழைத்துச் சொன்னார்.

``உங்க மகனுக்கும், மருமகளுக்கும் தாம்பத்யமே நடக்கலை... பிறகெப்படி குழந்தை பிறக்கும்?''

அதிர்ச்சியுடன் வெளியே வந்த பங்கஜத்திடம் சொன்னாள் சங்கரி.

``நான் உங்க வீட்டில காலடி எடுத்து வைக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடி,கல்யாணமாகி ஒரு வருஷத்தில கணவனை விபத்தில பறிகொடுத்திட்டு உங்க மக இங்க வந்திட்டா...

உங்க தங்கச்சிக்கு ஆறுதல் சொல்லி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கணும்... அது வரைக்கும் நாம தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டாம்னு உங்க மகன்கிட்ட சொன்னேன்.நான் உங்க மகளை மறுமணத்திற்கு பேசிப் பேசி கரைச்சிட்டிருக்கேன்.கூடிய சீக்கிரம் அவளுக்கு ஒரு நல்லது நடக்கும் அத்தை'' என்றாள் சங்கரி.

கண்ணீருடன் இழுத்து அணைத்துக் கொண்டாள் பங்கஜம்..

0 comments: