Sunday, August 3, 2008

நல்ல நாள் !

வருகிற பத்தாம் தேதி நம்ம சார்பா அன்னதானத்திற்கு கோயில்ல பணம் கட்டிட்டு வந்துட்டேன் கமலா!'' என்று சொன்னபடியே வீட்டுக்குள் நுழைந்தார் முத்தையா.

கமலாஓடிப்போய் காலண்டரைப்பார்த்தாள். பத்தாம் தேதி கரிநாள்!

``ஏங்க இப்படிப் பண்ணிட்டு வந்து நிக்கறீங்க? கரிநாள் அதுவுமா அன்னதானமா?''கொள்ளாமல் பதில் சொன்னார்.

``சரி... அடுத்த மாசத்துல ஒரு நல்ல நாளாப் பார்த்து புக் பண்ணிட வேண்டியதுதானே?!'' சற்று கோபமாகவே கேட்டாள் கமலா.

``கமலா! கரிநாளுன்னா ஏழைகளுக்குப் பசிக்காதா என்ன? நல்ல நாளில அன்னதானம் செய்ய ஆயிரம் பேரு வருவாங்க. எல்லாரும் புறக்கணிக்கிற இந்த மாதிரி நாட்கள்ல நாம ஏழைங்களோட பசியைத் தீர்த்தோம்னா, நமக்கு ரெண்டு மடங்கு புண்ணியம். அதைப் புரிஞ்சுக்கோ!''

கணவனின் பேச்சிலும் ஏதோ அர்த்தம் இருப்பதாய் கமலாவுக்குத் தோன்றியது..

0 comments: