தலைவர் ராசனின் குரல்,இயக்குநர்கள் கூட்டத்தில் கணீரென்று ஒலித்தது.
``தமிழில் பெயர் வைக்கவேண்டும், பேச வேண்டும். இதை, சங்கத் தீர்மானமாக நிறைவேற்றுங்கள்..''
``வேற பேசுங்க சார். இதெல்லாம் வேலைக்காகாது..'' இளம் இயக்குநர்கள் கூறினர்.
``நம் மொழியை, நாமே காக்காவிடின் வேறு எவர் காக்க வருவர்..'' ராசன் மீண்டும் கத்தினார்.
``இருக்கலாங்க. ஆனா, இது 2008-ம் வருஷம். 1968-இல்லன்னு புரிஞ்சுக்கங்க..''
அமளி, ஆர்ப்பாட்டத்தோடு, தீர்மானம் நிறைவேறியது.
``அப்பாடா. ஒரு வழியா வெற்றி அடைஞ்சிட்டோம். தமிழைக் காத்துடலாம்யா...''
``ஆமாண்ணே...'' சகா சொன்னார்.
கைபேசி ஒலித்தது. ராசன் பேசினார். சந்தோஷத்தில் துள்ளிச் சொன்னார்.
``சேதியக் கேளுய்யா. பாம்பே சூப்பர் மாடல் `தில்ரூபா' கால்ஷீட் கிடைச்சிருக்காம்.
ஜெய்ப்பூர் அரண்-மனையில படமெடுக்க அனுமதிச்சிட்டாங்களாம்.
பெங்கால் ஸ்டார் `ரிஷிமுகர்ஜி' வில்லனா நடிக்கறேன்கறாராம்.
புதுப்படத்தை, வர்ற நியூ இயர்ல ரிலீஸ் பண்ணிடுங்கன்னு, தயாரிப்பாளர் சுக்லால் சேட் சொல்றார்யா...''.
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment