கொஞ்சம் ஏமாந்தாலும் பர்ஸை அபேஸ் பண்ணிடுவாங்க.'' நான் சொன்னதைக் கேட்டு கார்த்திக் பர்ஸை உள் பாக்கெட்டில் பத்திரப்படுத்த...எங்களுக்கு அருகே... கலைந்த தலையும், அடர்ந்த தாடியும், வியர்வை முகமுமாய் விழித்துக் கொண்டிருந்த அந்த ஆசாமியைப் பார்த்ததும் எனக்குள் எச்சரிக்கை மணியடித்தது.
என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த அந்த ஆசாமி... என்னருகே வந்து உரசியபடி நின்று... பார்வையை இங்குமங்கும் சுழற்ற... நான் பாக்கெட்டிலிருந்து கையெடுக்காமல் சர்வஜாக்கிரதையாக அவனையே நோட்டம் விட...இது வேலைக்கு ஆகாது என உணர்ந்தவன், என்னிடமிருந்து நகர்ந்தான்.
`அப்பாடா பர்ஸ் தப்பியது...' சந்தோஷ உணர்வோடு... சென்ட்ரல் இரயில் நிலைய நிறுத்தத்தில் இறங்கி நானும் கார்த்திக்கும் நடக்க ஆரம்பிக்க... எனக்கு முன்னே நடந்து கொண்டிருந்த அந்த தாடி ஆசாமி தன்னுடன் வந்த பெண்ணிடம் கிசுகிசுப்பாகப் பேசியது என் காதில் தெளிவாக விழுந்தது.
``இப்பவெல்லாம் பிக்பாக்கெட் ஆபீசர் மாதிரி வருவான்னு நீ சொன்னது கரெக்ட் அஞ்சலை. பஸ்ல அந்த டிப்டாப் ஆசாமி முழியைப் பார்த்ததுமே எனக்கு அவன்தான் அந்த ஆசாமின்னு விளங்கிடுச்சு. எப்படியோ சமாளிச்சு... என் பர்ஸைக் காப்பாத்திக்கிட்டேன்.'' அவன் சொல்லிமுடித்த நொடியில் எனக்குள் சுரீரென ஏதோ உரைத்தது..
Thursday, September 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment