Tuesday, July 8, 2008

'தினமும் 4 கப் தேநீர் பருகுவீர்; மாரடைப்பு வராமல் தடுப்பீர்'



தினமும் நான்கு கப் தேநீர் பருகினால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவு என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

தேநீர் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் நியூட்ரீஷியன் ஃபவுண்டேஷன், எலும்புகள் வலுவாக இருப்பதற்கும், புத்துணர்வை ஏற்படுத்துவதற்கும், விழிப்புடன் இருப்பதற்கும் தேநீர் வழிவகை செய்வது தெரியவந்துள்ளதாக, 'டெய்லி மெய்ல்' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த டயட்டீஷியன் கேரி ரக்ஸ்டன் கூறுகையில், தினமும் மூன்று கப்களுக்கு மேலாக தேநீர் பருகுவதற்கும், மாரடைப்பு அபாயம் குறைவதற்கும் இடையே தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரம் முழுமையாக உள்ளது" என்றார்.

தேயிலையில் உள்ள போலிஃபினல்ஸ் என்று அழைக்கப்படும் ஆன்டியாக்சிடென்ட்ஸ், மனித உடம்பின் உயிரி ரசாயன இயக்கங்களுக்கு மிகுந்த பலனை அளிப்பதாக, இந்த ஆய்வு கூறுகிறது.

0 comments: