
நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் மிக அவசியம். அதிக நினைவாற்றல் உள்ளவர்களே தங்களது துறைகளில் அதிகம் பிரகாசிக்கின்றனர்.
குறிப்பாக, அதிக நினைவாற்றல் உள்ள மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடிக்கின்றனர்.
சமீபகாலமாக, நினைவாற்றலை வளர்ப்பதற்காகவே பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், முறையான சில உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே நினைவாற்றலே அதிகரிக்க முடியும்.
* காய்கள்: நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி, வெண்டைக்காய்க்கு மிக அதிகமாகவே உண்டு. இதன் வழுவழுப்பான தன்மை நினைவாற்றலை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. பிற காய்கறிகளையும் உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்
* கீரைகள்: கீரை வகைகளை தினந்தோறும் உணவில் சேர்ந்து வந்தால் நினைவாற்றல் பெருகும். குறிப்பாக, வல்லாரை, பசலைக் கீரை போன்றவற்றை சமைத்து உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* கிழங்கு: சேப்பங்கிழங்கை வேகவைத்து உணவில் சேர்த்துக்கொண்டால், நினைவாற்றல் அதிகமாக இருக்கும்.
* இதுதவிர, மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் தினந்தோறும் செய்துவந்தால், நினைவாற்றல் பல மடங்கு பெருகும்.
0 comments:
Post a Comment