தேவையான பொருட்கள்:
சிக்கன் கால்கள் -12,
தயிர் - 4 டேபிள்ஸ்பூன் ,
தோல் நீக்கி வேக வைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி அளவு,
பெ.வெங்காயம்-2,
உப்பு, சன் பிளவர் ஆயில்,நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
சிக்கனை தோல் நீக்கி சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிய விடவும். தண்ணீர் வடிந்ததும் சிக்கன் கால்கள், தயிர், மி.தூள், எலுமிச்சை சாறு, உப்பு எல்லாவற்றையும், சேர்த்து கலந்து மூடி 6 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் அதை பரவலாக வைத்து மூடி அளவான தீயில் வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் இறக்கி ஒரு ப்ளேட்டில் ஆறவிடவும். ஆறிய சிக்கனை ஒரு வாணலியில் சன் ஃப்ளவர் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைப் பதத்திற்கு பொரிக்கவும்.
வேறு ஒரு அகன்ற பாத்திரத்தில் மெல்லியதாக நீள வாக்கில் வெட்டிய வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து, அதற்கு தேவையான நல்லெண்ணெய் விட்டு மெல்லிய தீயில் வதங்க விடவும். அரைப்பதம் வதங்கியதும் பொரித்து வைத்த சிக்கன் கால்கள், கறிவேப்பிலையையும் சேர்த்து மூடி, திரும்ப மெல்லிய தீயில் வதங்கவிட வேண்டும்.
அடிக்கடி கிளறி விடவும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கி வரும்போது சிக்கன் 65-வை இறக்கி விடவும்.
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment