Friday, July 11, 2008

நெத்திலி சீனி சம்பல்

தேவையான பொருட்கள் :

தலை நீக்கிய காய்ந்த சிறிய நெத்திலி - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் (நொறுக்கியது) - 2 டீஸ்பூன்,
டொமேட்டோ கெச்சப் - 4 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி-சிறிதளவு,
பூண்டு-5 பல்,
நல்லெண்ணெய்-4 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப.

செய்முறை:

நெத்திலியை சுடுதண்ணீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, மண் போக நன்றாக கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். மெல்லியதாக நீளவாக்கில் வெங்காயத்தை வெட்டி வைக்கவும்.

இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். ஓர் அகன்ற வாணலியில் நெத்திலி, வெங்காயம், அரைத்த விழுது, மிளகாய்த்தூள், நொறுக்கிய மிளகாய், டொமேட்டோ கெச்சப், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.

பின் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கலந்து வைத்ததைப் போட்டு நன்கு கிளறி மூடி, அளவான தீயில் பொரிய விடவும்.

0 comments: