தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம் (எலும்பில்லாதது),
பெ.வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்,
தக்காளி - 3,
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு-5 பல்,
மிளகாய்த் தூள்- ஒரு டேபிள் ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள்-ரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள்-ரு டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப,
மல்லித் தழை-லு கப்.
செய்முறை:
சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தமாக கழுவி மஞ்சள்பொடி, தேவையான உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவிடவும். பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும். இஞ்சி, பூண்டை அரைத்து எடுக்கவும். சிக்கன் வெந்ததும் தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆறவிடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு தக்காளியையும் சேர்த்து குழையும் வரை வதக்கவும். பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். இத்துடன் சிக்கனையும் சேர்த்து மெல்லிய தீயில் மூடி அடிக்கடி கிளறி விடவும். வெந்ததும் மல்லி இலையைத் தூவி இறக்கிவிடவும்.
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment