Thursday, July 10, 2008

பைனாப்பிள் சட்னி

தேவையான பொருட்கள்:

நறுக்கிய பைனாப்பிள் - ஒரு கப்,
பேரீச்சம் பழம் - 8,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்,
உலர் திராட்சை - 3 டீஸ்பூன்,
வினிகர் - 1/2 கப்,
சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பைனாப்பிள், பேரீச்சை இரண்டையும் ஒரு கப் தண்ணிரில் மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் வற்றியவுடன் சர்க்கரை, மிளகாய் தூள், திராட்சை, ஏலக்காய், உப்பு, விணீகர் எல்லாவற்றையும் கலந்து சுருள்பதத்துக்கு வரும் வரை கிளறிக்கொண்டே இருந்தால் பைனாப்பிள் சட்னி ரெடி!டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்

0 comments: