Wednesday, July 9, 2008

கொய்யா சட்னி

தேவையான பொருட்கள்:

கொய்யாப் பழம் - 250 கிராம் (கொட்டை நீக்கி பொடியாக நறுக்கியது), வினிகர் - அரை கப்,
தண்ணீர் - 2 கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய் -2,
சர்க்கரை - 180 கிராம்,
துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
உலர்ந்த திராட்சை - ஒரு டீஸ்பூன்,
பாதாம் பருப்பு - 10.

செய்முறை:

நறுக்கிய கொய்யாவுடன் இஞ்சி, தண்ணீர் கலந்து வேக வைக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய், வினிகர், மிளகாய்த்தூள், பாதாம், திராட்சை இவற்றை கலந்து திக்காகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். எல்லா வகை டிபன்களுக்கும் ஏற்ற சட்னி இது!

0 comments: