Wednesday, July 9, 2008

உளுத்தம் கீர்

தேவையான பொருட்கள் :

பால் - 250 மி.லி,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
பச்சரிசி (அ) பாஸ்மதி அரிசி - 100 கிராம்,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
துருவிய வெல்லம் - 100 கிராம்,
ஏலக்காய்ப் பொடி, கேசரிக் கலர், நெய், சுக்குப்பொடி - தலா 1/2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு- தேவையான அளவு.

செய்முறை :

உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுக்கவும்.

தேங்காய்த் துருவலை அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும்.ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். அதில் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிபிடிக்காமல் கிளறவும்.கூடவே வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும். இந்த உளுத்தம் கீர் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.

0 comments: