தேவையான பொருட்கள் :
பாதாம் பருப்பு - 100 கிராம்,
சர்க்கரை - ஒரு கப்,
பால் - 3 கப்,
ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு - 25 கிராம்,
சாரப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்,
பச்சைக் கற்பூரம், கேசரிக்கலர் - சிறிதளவு.
செய்முறை :
முந்திரிப் பருப்பு, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு மூன்றையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கி தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அதனை 3 கப் நீர் விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் கிளறவும். பச்சை வாசனை மாறியதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றவும்.பிறகு மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியாக வந்ததும் கீழே இறக்கவும். இதனை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்
Wednesday, July 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment