தேவையான பொருட்கள் :
பால் - 6 கப்,
பொடியாக நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் (சேர்த்து) - 2 கப், சர்க்கரை - ஒரு கப்,
மெல்லிய உடைத்த சேமியா,
ஒரு கப் க்ரீம் - ஒரு கப்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை :
சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். அத்துடன் வறுத்த சேமியா சேர்த்து, வேக விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி க்ரீம், பழக்கலவை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஃப்ரிட்ஜில் ஒருமணி நேரம் வைத்துப் பரிமாறவும்.
Wednesday, July 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment