Wednesday, July 9, 2008

கோதுமை கீர்

தேவையான பொருட்கள் :

உடைத்த கோதுமை - 50 கிராம்,
சர்க்கரை - 4 டீஸ்பூன்,
காய்ச்சிய பால் - 21/2 கப்,
தண்ணீர் - ஒரு கப்,
க்ரீம் - 1/2 கப்,
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்,
பாதாம் பருப்பு - 25 கிராம்,
வெள்ளித்தாள் -2,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உலர் திராட்சை,
பிஸ்தா பருப்பு - தலா 10 கிராம்,
பன்னீர் - சில துளிகள்.

செய்முறை :

நெய்யில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மூன்றையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.அதே நெய்யில் உடைத்த கோதுமையைக் கொட்டி லேசாக நிறம்மாறும் வரை வறுத்து அத்துடன் ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தண்ணீர் விட்டு வேக விடவும்.

வெந்தபின் அடுப்பிலிருந்து இறக்கி, பால், பன்னீர், க்ரீம், பொரித்த பருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். இதன் மீது வெள்ளித் தாளை விரித்து அலங்கரித்து சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறவும்

0 comments: