Saturday, July 12, 2008

அவல் புட்டு''

தேவையான பொருட்கள் :

கெட்டி அவல் - 250 கிராம்,
தேங்காய்ப் பால் - 100 மி.லி.,
சர்க்கரை - 50 கிராம்,
முந்திரி பருப்பு - 10 (நெய்யில் வறுத்தது)
ஏலக்காய் பொடி - சிறிதளவு,
டூட்டி ப்ரூட்டி - சிறிதளவு.

செய்முறை :

அவலை லேசாக வறுத்து ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் தேங்காய் பால் சேர்த்து ஆவியில் வேகவிடவும். பின்பு வெந்த புட்டுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேத்து நன்கு கலக்கவும். கடைசியாக நெய்யைச் சேர்த்துக் கிளறி ட்ருட்டி ப்ரூட்டி பழங்களால் அலங்கரிக்கலாம்.

பசி நேரத்திற்கு ஏற்ற டிஃபன் வகை இது! எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகை இது!

0 comments: