Wednesday, July 16, 2008

மகள்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நியூயார்க் ஃப்ளைட் தரை இறங்கியது. சுசீலா தன் மூன்று வயதுக் குழந்தையுடன் இறங்கினாள். வரவேற்க இரு குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். சுசீலாவிற்கு தர்மசங்கடம் ஆரம்பமானது.

இப்போது மாமனார் வீட்டிற்குப் போவதா பெற்றோர் வீட்டிற்குப் போவதா?

மாமனார் வீட்டிற்குப் போக முடிவு செய்தாள்.

அப்போது `ஏங்க! சம்பந்தியம்மா பிசிபேளாபாத் செஞ்சா சூப்பரா இருக்குமே! அங்கே போயி சாப்பிட்டுட்டு அப்புறம் நம்ம வீட்டுக்குப் போகலாங்க' என்றார் சுசீலாவின் மாமியார்.

`ஆமாமா! கண்டிப்பா போய்ட்டுப் போவோம்' என்றார் மாமனார்! எல்லோருமே சந்தோஷமாக ஆமோதித்தார்கள்.

மாமியாரின் கரங்களைப் பாசத்துடன் பற்றினாள் சுசீலா. அர்த்தபுஷ்டியுடன் கண்களைச் சிமிட்டினார் மாமியார்.

சுசீலாவின் மனதில் அம்மாவை விட ஒரு படி உயர்ந்து நின்றார் அவளது மாமியார்!.

0 comments: