Wednesday, July 16, 2008

பொட்டுக்கடலை பாயசம்


தேவையானப் பொருட்கள்

பொட்டுக்கடலை பாயசம்
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை - 1கப்
தேங்காய் - 1
சர்க்கரை - 2கப்
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 10
நெய் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை
1.பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைத்து பிசிறு இல்லாமல் ஜலிக்கவும்.
2.தேங்காயை அரைத்து முதல் பால் ,இரண்டாம் பால்,மூன்றாம் பால் என்று சுமார் அரை லிட்டர் அளவில் எடுத்துக் கொள்ளவும்.
3.மூன்றாம் பாலில் பொட்டுக்கடலை மாவை கட்டி இல்லாமல் கரைத்து ,அகலமான பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்கவும்.
4.கரண்டியால் கைவிடாமல் கிளரவும்.இல்லாவிட்டால் கட்டி பிடித்து விடும்.
5.ஒரளவு வெந்ததும் இரண்டாம் பால்,முதல் பால் ஊற்றி கிளரவும்.
6.சர்க்கரை ஏலப்பொடி சேர்க்கவும்.
7.நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.பறிமாறும் பொழுது துளி நெய் விட்டு பறிமாறவும்.
8.சுவையான,சத்துமிக்க,சுலபமாக செய்யக்கூடிய பாயசம் இது.
8.விரும்பினால் 2 டேபிள் ஸ்பூன் கன்ஸ்டன்ட் மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.

0 comments: