தயிரில் ஊறுவதால் கோழி மிகவும் சாப்ட்டாக இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
கோழி =1/2கி
வெங்காயம் =2
தக்காளி =3
இஞ்சி =சின்ன துண்டு
பூண்டு =7பல்
மிளகாய்பொடி =2தேக்கரண்டி
ம.பொடி =1/2ஸ்பூன்
மிளகு, சீரகத்தூள் =1தேக்கரண்டி
தயிர் =1/2கப்
கரம் மசாலாபொடி =1/2பொடி
உப்பு =தேவையானது
எண்ணை =3தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தட்டி கழுவிய கோழியில் போட்டு, ம.பொடி, மிளகாய்பொடி, மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள், தயிர் ஆகியவற்றை போட்டு பிசறி ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணை விட்டு கறியை போட்டு கிளரி, பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு போட்டு தண்ணீர் வற்றும்வரை கிளறி, 1/2கிளாஸ் தண்ணீர் விட்டு சிறிதீயில் மூடி வேக விடவும். நன்கு வெந்தவுடன் சுருள கிளறி இறக்கவும்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment